Translate

வெள்ளி, 16 நவம்பர், 2012

சித்தர் வேதா குருகுலம் - அறிமுகம் -siddhar vedha gurukulam

சித்தர் வேதா குருகுலம் - அறிமுகம்





 சித்தர் வேதா குருகுலம் 


பதினெண் சித்தர் துதி

நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக் கீசர் 
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்திடைக் காடரும் போகர் புலிக்கை யீசர்
கருவூரார் கொங்கணவர் காலாங்கி
சிந்தி அழுகண்ணர் அகப்பேய் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர் சித்தர் பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னிச் சிரத் தனியாய்ச் சேர்த்து வாழ்வோம்

நம் தமிழகத்தில் தோன்றிய தமிழ்ச் சித்தர்கள் இயற்றிய காவியங்களின் பெருமை அளப்பரியது.இவைகளில் யோகம்,ஞானம்,இரசவாதம்,வைத் தியம்,சோதிடம்,மந்திரம்,சரகலை,பஞ்சபட்சி,காயகற்பம்,போன்றவைகள் மட்டுமல்லாமல் புவியியல் இரகசியங்கள்,மூலிகை-தாவரங்களின் சூட் சும இரகசியங்கள்,தாது-சீவ வர்க்க இரகசியங்கள்,பஞ்ச பூத இரகசியங்கள், நவக்கிரக,பிரபஞ்ச இரகசியங்களை தங்கள் ஞானத்தால் கண்டறிந்து உணர்ந்தவற்றை பல லட்சம் பாடல்களாக இவ் வையகத்திலுள்ளோர் அனைவரும் பயன் பெற வேண்டு மென்ற நோக்கில் வடித்துள்ளனர்.

சித்தர் நூல்களில் உள்ள பல கருத்துக்கள் இன்றைய அறிவியல் உலகில் நம்ப முடியாமல் பிரமிப்பும் ஆச்சரியமும் அளிக்கக்கூடிய ஏராளமான அதிசயங்கள் உள்ளன.

மேலும் சித்தர் நூல்களில் அபூர்வமான இக் கலைகளின் மறை பொருள்  இரகசியங்களை "துன்மார்க்க எண்ணம் கொண்டோர்" மனிதகுல நலனுக்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக ஏராளமான பரிபாசை களில் மறைத்து வைத்து உத்தம குணம் கொண்ட நற்சீடர்களுக்கு மட்டுமே குரு சீட வழி முறைகளில் இரகசிய விளக்கங்கள் போதிக்கப் பட்டு வந்துள்ளது. 

அதீத இவ்வரிய கலைகளை சித்தர் வழி பாரம்பரிய முறையில் தொன்று தொட்டு அனுபவ முறையாக கையாண்டு வருகின்றோம்,

மேலும் சித்தர் நெறிகளையும், கலைகளையும், கற்று வாழ்வில் முன்னேற விரும்புபவருக்கும்,இக்கலைகளின் மூலமாக பிறர் வாழ்வின் நலனுக்கு மட்டும் தொழில் முறையில் பிரயோகம் செய்ய விரும்புபவர்களின் தகுதி, திறமை, பிராப்தம் அறிந்து குரு சீட முறையில் சூட்சும இரகசிய தீட்சை, மற்றும் பயிற்சி கொடுத்தும் வருகின்றோம்.

நன்றி !
இமயகிரி சித்தர்...
www.siddharprapanjam.org